பிளே ஸ்டோரிலிருந்து 7 அபாயகரமான ‘ஆப்’களை நீக்கியது கூகுள்…!


7 அபாயகரமான ‘ஆப்’களை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

நமது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த கூடிய மொபைல் அப்ளிகேஷன்கள் எனப்படும் ஆப்கள் ஏராளமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அவை பெரும்பாலும் பயன்தரக்கூடியவை என்றாலும் சில தீங்கு விளைவிக்கக் கூடிய ஆப்களும் இருக்கின்றன.

ஸ்மார்ட் போன்களில் நாம் அதிகம் பயன்படுத்தும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருப்பதால் அதனை பயன்படுத்தி, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் மொபைல் ஆப்களே ஏராளமாக கிடைக்கின்றன.

அந்த ஆப்களில் ‘பாப் அப்’ எனப்படும் விளம்பரங்கள் மூலமோ, அல்லது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் லிங்க் மூலமோ உங்களை தீங்கு விளைவிக்கும் இணைய பக்கங்களுக்கு உங்களை அழைத்து சென்று விடும். இதன் மூலம் உங்களை குற்றச்செயல்களில் உங்களை அறியாமல் பங்கு பெற செய்ய முடியும்.

தற்போது அப்படிப்பட்ட 7 ஆப்களை தற்போது கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.


அவை

1.கியூஆர் கோட் ப்ரீ ஸ்கேன் (QR Code free scan)

2. கியூஆர் கோட் ஸ்கேன்னர் ப்ரோ (QR Code scanner pro)

3. கியூஆர் கோட் ஸ்கேன் பெஸ்ட் QR Code Scan Best

4. கியூஆர் கோட்/பார்கோட் ப்ரீ ஸ்கேன்(QR Code/ Barcode free scan)

5. கியூஆர் அண்ட் பார்கோட் ஸ்கேன்னர் (QR & Barcode scanner)

6. ஸ்மார்ட் காம்பஸ் (Smart compass)

7. ஸ்மார்ட் கியூஆர் ஸ்கேன்னர் அண்ட் ஜெனரேட்டர் (Smart QR scanner and Generator). -Source: tamil.eenaduindia

இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம். இட்லியை சுவைத்து சாப்பிட்டு கொண்டாடுவோம்!