பளபளப்பான சருமம் வேண்டுமா..? வீட்டிலேயே இருக்கு இயற்கையான தீர்வுகள்..!


குறைபாடற்ற ஆரோக்கியமான சருமம், நமது அழகிற்கு முக்கியமானதாகும். நம் வாழ்க்கை முறையும், சரும பாதுகாப்பு முறையும் அழகிற்கு இன்றியமையாதது.

சருமம் பாதிப்படைவத்ற்கு சருமத்தின் தன்மை, தூக்கமின்மை, போதியளவு ஊட்டச்சத்து இல்லாமை, மாசு, சூரிய ஒளியில் உள்ள UV கதிரின் பாதிப்பு போன்றன காரணமாகின்றன.

சரும பாதுகாப்பிற்கு இயற்கையான தீர்வுகள்.


(1)எலுமிச்சம் பழம்

.எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்டிக் அமிலம் சருமத்தின் அழுக்கை அகற்றுவதுடன், கரும்புள்ளிகள் நீங்குவத்ற்கும் உதவுகின்றது.

புதிதாக எடுக்கப்பட்ட எலுமிச்ச சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 10 நிமிடங்களின் பின்னர் நன்றாக கழுவி, வெள்ளரிக்காய் துண்டுகளை அதில் வைக்க வேண்டும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


(2)மஞ்சள்.

மஞ்சள் தொற்று மற்றும் தளும்புகளை நீக்கும் தன்மை உடையது.

பால் அல்லது நீரில் மஞ்சள் மா, கடலை மா சரி பங்கில் சேர்த்து, முகத்தில் நன்றாக தடவி உலர விட வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இதை செய்து வந்தால் பளபளப்பான சருமத்தை பெற முடியும்.


(3)கற்றாளை

கற்றாளையில் உள்ள பக்டீரியா தொற்றுக்கு எதிரான சக்தி, சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.

கற்றாளை இலையிலிருந்து சாற்றை எடுத்து, முகத்தில் பஞ்சை வைத்து நன்றாக தடவ வேண்டும். அரை மணி நேரத்தின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி மிருதுவான சருமத்தை பெற முடியும.

(4)சமையல் சோடா

சமையல் சோடா சருமத்தின் PH அளவை பேணுவதுடன், பருக்கள், புள்ளிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கின்றது.

ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவுடன், எலுமிச்சபழச் சாறு, நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவி உலர்ந்த பின்னர் கழுவ வேண்டும்.


(5)வெள்ளரிக்காய்.

வெள்ளரிக்காயில் உள்ள நீர்த் தன்மை, ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

வெள்ளடிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, தூங்குவதற்கு முன்னர் முகத்தில் தேய்க்க வேண்டும். காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர வேண்டும்.


(6)புதினா.

புதினா சருமத்தை குளிர்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகின்றது.ஒரு தேக்கரண்டி புதினா பவுடருடன், ஒரு மேசைக்கரண்டி தயிரை சேர்த்து கலவையாக்க வேண்டும்.

அரை மணி நேரத்தின் பின்னர் முகத்தில் தடவி காய்ந்த பின்னர் கழுவ வேண்டும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!