இணையத்தளங்களை வேவு பார்க்கும் பேஸ்புக் நிறுவனம் – அதிர வைத்த ஆய்வு..!


ஜெர்மனியைச் சேர்ந்த கிலிக்ஸ் (Cliqz) என்ற நிறுவனம் பேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் உலக அளவில் 30% இணையதளங்களைப் பற்றியும் அவற்றைப் பார்வையிடுபவர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி அவர்களை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது

பேஸ்புக்கில் தகவல் திருட்டு நடைபெற்றதால் அதற்கு எதிராக #DeleteFacebook என்ற பெயரில் ஹேஸ்டேக் உலகம் முழுதும் பிரபலமாகியுள்ள நிலையில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியகியுள்ளது.

நாம் பேஸ்புக் அக்கவுண்ட்டை வேண்டாம் என டெலிட் செய்தாலும் அந்த அக்கவுண்ட்டை வைத்திருந்தவரையும் அவர் பயன்படுத்தும் இணையதளங்களையும் பேஸ்புக் ரகசியமாக வேவு பார்க்க முடியும் என்ற அதிரவைக்கும் விஷயத்தை அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

முக்கியமான தகவலாக பெரும்பான்மை பயனாளர்கள் பயன்படுத்தும் Ad Blocker எனும் செயலி பாதுகாப்பானவை அல்ல என்றும் அவையும் பயன்படுத்துபவரின் இன்டர்நெட் பயன்பாடு குறித்த தகவல்களைத் திருடுகின்றன என்பதை அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!