எகிப்தில் இளம் பெண்ணிற்கு மரண தண்டனை? எதற்கு தெரியுமா..?


பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் முதுகுவலி மாத்திரையை கொண்டு சென்ற குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Laura Plummer(33) என்பவர் கடந்த மாதம் எகிப்து நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.

எகிப்தில் உள்ள அவரது நண்பர் ஒருவருக்கு அடிக்கடி முதுகுவலி ஏற்படும் என்பதால் Tramadol என்ற மாத்திரையை நூற்றுக்கணக்கில் கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், விமான நிலையத்தில் இறங்கியதும் நடத்திய பரிசோதனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எகிப்து நாட்டு சட்டப்படி, வலி நிவாரணி மாத்திரையான Tramadol-யை வைத்திருக்க அனுமதி கிடையாது.

ஏனெனில், இம்மாத்திரையை பயன்படுத்தி ஹெராய்ன் போதை மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதால் இச்சட்டம் அந்நாட்டில் அமுலில் உள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் பொலிசாரிடம் விளக்கம் அளித்த நிலையிலும் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக பெண் மீது 15 நாட்களுக்கு பின்னர் விசாரணையை தொடங்கலாம் என நீதிபதி அனுமதி அளித்துள்ளனர்.

பிரித்தானிய குடிமகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது நீண்ட ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!