கர்ப்பிணிகள் கட்டாயம் ஏன் கிவி பழத்தை சாப்பிட வேண்டும் தெரியுமா..?


கர்ப்ப காலத்தில் தாய் ஒருவர் உண்ணும் உணவுகள் தொடர்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதனால் குழந்தைக்கு எது சத்தான உணவு என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

அந்த வகையில், கிவி பழம் என்பது கருவுற்றுள்ள தாய் மற்றும் சேய்க்கு மிகவும் நன்மைபயக்கக் கூடிய பழவகைகளில் ஒன்றாகும். கிவி பழத்தில் ஏனைய பழங்களைப் பார்க்கிலும் இருமடங்கு விட்டமின்சி, நார்ச்சத்து, காபோஹைதரேட், சக்தி மற்றும் ஏனைய கனியுப்புக்கள் என்பன நிறைந்துள்ளது.

இந்த சத்துள்ள பழம் எவ்வாறு கருவுற்ற தாய்க்கும் வயிற்றில் இருக்கும் சேய்க்கும் உதவுகின்றது என்பதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

01. ஃபோலேட்
கிவி பழத்தில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் உருவாவதில் அதிக பங்களிப்பு செய்கின்றன. அத்துடன் முள்ளந்தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பதுடன் பிறப்பு குறைபாடுகளையும் தடுக்கிறது.

02. விட்டமின்சி
ஏனைய பழங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிவி பழத்தில் இருமடங்கு விட்டமின்சி பொதிந்து காணப்படுகின்றது. அத்துடன் குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாவதற்கும் இது உதவுகின்றது.


03. இனிப்பு
கிவி பழத்தில் இயற்கையாகவே காணப்படும் இனிப்பு சுவையானது கர்ப்ப காலத்தில் தாய்க்கு தேவைப்படும் இனிப்பை வழங்குகின்றது. அத்தோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகின்றது.

04. நல்ல முறையில் சமிபாடு
கிவி பழத்தில் உள்ள என்சைம்கள் உணவு நல்ல முறையில் சமிபாடடைய உதவுவதோடு மலச்சிக்கல்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றது.

05. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
கருவுற்றிருக்கும் தாய் ஒருவர் கிவி பழத்தை உண்பதன் மூலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
இதன் மூலம் தாய் தொற்றுக்குள்ளாவது தடுக்கப்படுவதோடு குழந்தையும் பாதுகாக்கப்படுகின்றது.

06. ஹோர்மோன் சமநிலையை பேணுகின்றது
கர்ப்ப காலத்தில் பொதுவாக ஹோர்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதனால் மனஅழுத்தம் மற்றும் சோர்வு என்பன ஏற்படும். கிவி பழத்தை உண்பதன் மூலம் ஹோர்மோன் சமநிலையின்மை சீர்செய்யப்பட்டு மனஅழுத்தம் மற்றும் சோர்வு என்பன தடுக்கப்படும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!