ஆண்களுக்கான சில முக்கிய அழகுக் குறிப்புகள் இதோ..!


பெண்களை விடவும் ஆண்கள் தமது அழகின் மீது அதிக அக்கறை செலுத்துவதில்லை. ஆண்கள் தாம் அணியும் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முகத்திற்கு கொடுப்பதில்லை. அந்த வகையில் ஆண்களுக்கான சில முக்கிய அழகுக் குறிப்புகள் இதோ!

ஆண்களின் முக அழகிற்கு: பொதுவாக அதிகமாக வெயிலில் சுற்றித் திரிபவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர். இவ்வாறு வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஐஸ்கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.


சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசாரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் இளஞ் சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறி விடும்.

முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சம்சாற்றுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கரும்புள்ளிகள் மாயமாக மறைந்து விடும்.


சில ஆண்கள் சிகரெட் பிடிப்பதால் உதடுகள் கறுப்பாக இருக்கும். இவர்கள் பீட்ரூட்சாறு, புதினா இலைச்சாறு அல்லது மாதுளைச் சாற்றை உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!