மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் வீட்டிலிருந்தே எப்படி இணைப்பது..?


மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் வீட்டிலிருந்தே இணைப்பதற்கான படிப்படியான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.உங்கள் மொபைல் எண்ணிலிருந்து ‘14546’ என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

2.அடுத்து, IVR ஆனது நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது வெளி நாடு வாழ் இந்தியர்களா(NRI) என்று கேட்கும். அந்த ஆப்சனில் நீங்கள் இந்தியராக இருந்தால் ‘1’ ஐ செலக்ட் செய்யவும், NRIs ஆக இருந்தால் ‘2’ ஐ செலக்ட் செய்யவும்.

3.பிறகு, ஆதார் விதிகளின்படி, நீங்கள் உங்களுடைய ஆதார் எண்ணை, மொபைல் சர்வீஸ் புரொவைடருக்கு அதாவது (பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி) ஆகியவற்றை வழங்க சம்மதிக்க ‘1’ ஐ செலக்ட் செய்யவும்.

4. அடுத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை சேர் செய்யவும். அதை உறுதி செய்ய ‘1’ ம், ரீஎன்டர் செய்ய ‘2’ம் செலக்ட் செய்யவும்.

5.ஆதார்எண் சரியாக இருக்கும்பட்சத்தில், OTP-ஐ கிரியேட் செய்ய ‘1’ஐ செலக்ட் செய்யவும். இப்பொழுது OTP உங்கள் நம்பருக்கு வரும்.

6. உங்கள் ஆதாரை ரீவெரிபிகேசன் செய்ய 6 இலக்க OTP-ஐ என்டர் செய்யவும். ஒருமுறை கிரியேட் செய்த OTPயை 30 நிமிடங்களுக்குள் பயன்படுத்தவும்.

7. இறுதியாக மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் லின்க்கை செலக்ட் செய்யவும்.

8. இதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணை ஆதாருடன் இணைக்க ‘2’ ஐ செலக்ட் செய்யவும். மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளையே இருநபருக்கும் பாலோ செய்யவும்.

9. 26 மணிநேரத்திற்கு பிறகு, உங்கள் போனுக்கு ‘ஆதார் ரீவெரிபிகேசன் பிராசஸ் சக்ஸஸ்புல் அக்சப்டேட்’ என்று மெஸ்ஸேஜ் வரும்.மேலும், உங்கள் ஈமெயிலுக்கும் UIDAI இடமிருந்து ரிஜிஸ்டர் ID வரும். அவ்வாறு வரவில்லை என்றால், 1947 என்ற டால்ஃப்ரி நம்பரை தொடர்பு கொள்ளவும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!