பூண்டை கர்ப்பிணித் தாய்மார்கள் ஏன் கட்டாயம் உட்கொள்ள வேண்டும்..?


பூண்டு என்பது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒன்றாகும். இந்த பூண்டில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதுடன் மருத்துவ குணங்களும் பொதிந்துள்ளன. இதனாலேயே நம் முன்னோர்கள் அவர்கள் சமைக்கும் உணவு வகைகளில் பூண்டை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

இந்த பூண்டை கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்ளலாமா என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆம், இந்த பூண்டை கர்ப்பிணித் தாய்மார்கள் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
இவை என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.


01. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது
கர்ப்ப காலத்தில் பொதுவாக சில தாய்மார்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதுண்டு. பூண்டை உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவும் சீர் செய்யப்படும்.

02. குழந்தையின் எடையை அதிகரிக்கும்
தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு இந்த பூண்டு காரணமாகின்றது. தாய் ஒருவர் பூண்டை உட்கொள்வதன் மூலம், குறைப்பிரசவம் ஏற்படுவதும் தடுக்கப்படுவதோடு குழந்தையின் ஆரோக்கியமான நிறை பேணப்படுகின்றது.


03. கொலஸ்ரோலை குறைக்கின்றது
பூண்டில் உள்ள அலிசின் எனும் மூலப்பொருள் கொலஸ்ரோல் அளவைக் குறைப்பதோடு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கின்றது.

04. புற்று நோயைத் தடுக்கின்றது
கர்ப்பகாலத்தில் மட்டுமல்லாது ஏனைய நாட்களிலும் பெண் ஒருவர் தொடர்ந்து பூண்டை உட்கொண்டு வருவதன் மூலம் புற்று நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

05. தடுமல் மற்றும் தொற்றுக்கு சிறந்த நிவாரணி
பூண்டை உட்கொள்வதனால் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு உடம்பில் உள்ள பக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.


06. சருமம் மற்றும் வாய் தொடர்பான தொற்றுக்களை தடுக்கின்றது
பூண்டில் உள்ள அன்டிமைக்ரோபயல் மூலப்பொருட்கள் சருமம் மற்றும் வாயில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அழிக்கின்றது.

07. முடி உதிர்வது தடுக்கப்படும்
பூண்டில் உள்ள அலிசின் முடி உதிர்வை கட்டுப்படுத்தி கூந்தலின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!