பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு..!


பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தூம்-3 இயக்குநர் விஜய்கிருஷ்ணா ஆச்சர்யா இயக்கத்தில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ என்ற படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அமீர் கான், கத்ரினா கைப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜோத்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மருத்துவர்கள் ஜோத்பூருக்கு விரைந்து உள்ளதாக ஆங்கில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!