கருவுற்ற தாய்மார்கள் தேன் உண்பதால் என்ன நன்மைகள் தெரியுமா..?


தேன் என்றாலே அதன் இனிப்பு சுவை தான் ஞாபகத்திற்கு வரும். இந்த தேனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பர். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல தேனை அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்து தான்.

கருவுற்ற தாய்மார்கள் தேனை உண்ணலாமா என்பது தான் எமது கேள்வி. இந்தக் கேள்விக்கு ஆம் என்பதே சரியான பதில். தேனில் அடங்கியுள்ள சத்துக்கள் தாய்க்கு மட்டுமல்லாது சேய்க்கும் இன்றியமையாதது என்பதே உண்மை.


தாய் ஒருவர் தேனை உண்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என விரிவாகப் பார்ப்போம்.

01. நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
தேனில் உள்ள அன்டி பக்டீரியாக்கள் மற்றும் அன்டிபயோட்டிக் என்பன நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. அத்துடன், வெட்டுக் காயங்கள், தீக் காயங்கள், உஷ;ணத்தால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றை குணமாக்குகின்றது.


02. தூக்கமின்மையை இல்லததொழிக்கின்றது
தேனில் உள்ள ஒரு விதமான மயக்கம் ஏற்படுத்தும் தன்மை தூக்கமின்மையை இல்லாதொழிக்கின்றது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அதனை குடித்து வந்தால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

03. தடுமல் மற்றும் இருமல் குணமாகும்
தேனில் உள்ள சத்துக்கள், இருமல் மற்றும் தடுமலுக்கு எதிராக போராடி அவற்றை குணமாக்குகின்றது.


04. தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணி
தேனில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தி தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்னிறது. இஞ்சி தேநீருடன் அல்லது எலுமிச்சம் சாற்றுடன் தேன் கலந்து குஎத்தால் தொண்டை வலி குணமடையும்.

05. ஒவ்வாமையை தடுக்கிறது
தேனை குறிப்பிட்ட அளவு தினம் உட்கொண்டு வருவதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுவது கணிசமாக குறைக்கப்படும்.


06. மண்டை ஓட்டின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது
தேனில் உள்ள அன்டி பக்டீரியாக்கள் மண்டை ஓட்டில்ஏ ற்படும் அரிப்பு, ஒவ்வாமை மற்றும் பொடுகுத் தொல்லை என்பவற்றை நீக்குகின்றது. மேற் குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏற்படுமிடத்து தண்ணீரில் தேன் கலந்து மண்டை ஓட்டில் பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!