ஏர்டெல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செய்த அதிர்ச்சி செயல்..!


வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அரசு மானியத் தொகையை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்த ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது.

உங்களது வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்ற விதிமுறையை பின்பற்றி எந்தவிதமான கணக்குகளும் தொடங்கவில்லை. இதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிம்கார்டு விற்பனை செய்யும்போது அடையாள அட்டையாக ஆதார் நகலைப் பெற்றது. அப்போது, வாடிக்கையாளர்களின் ஒப்புதலின்றி ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வாடிக்கையாளர்களின் அரசு மானியத் தொகையை தங்களது பேமென்ட் வங்கிக் கணக்கிற்கு திருப்பிவிட்டுள்ளது ஏர்டெல். தங்களது பேமென்ட் கணக்கிற்கு மானியத் தொகை வாராததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர். புகாரைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட ஆய்வில் 23 லட்சம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது ரூ. 47 கோடியை தனது பேமெண்ட் வங்கிக்கணக்கு ஏர்டெல் நிறுவனம் மாற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்தது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!