காலையில் இதை மட்டும் செய்யுங்க.. உங்க வீட்டில் பண மழை கொட்டும்..!!


அதிகாலையில் எழுங்கள், உடலும் மனமும் உற்சாகமாகும், அப்படி எழுவதனால், நேரம் போதவில்லை என்று பரபரப்பாக அலுவலகத்துக்கோ, பள்ளி கல்லூரிக்கோ செல்லும் வீட்டின் அங்கத்தினர்கள் அங்கலாய்க்கும், காலை நேர அவசரத்துக்கு, நிரந்தர தீர்வு அளிக்கமுடியும். இதுபோல, நிறைய அவ்வப்போது, கேட்டும் கடந்தும் வந்திருப்போம்.

கேட்கும்போது, மிகவும் ஆர்வமாகக்கேட்டுக்கொண்டு, மறுநாள் பார்த்தால், அதே பரபரப்பு, அதே லேட், அதே கெஞ்சல், ஏன் இந்த நிலை? காலையில் எழுவது என்ன அத்தனை கடினமா? ஏன் எழ முடியவில்லை, அதிகாலையில்?

நேரந்தவறாமை என்பது, நாம் பேணிக்காக்க வேண்டிய பெருஞ்செல்வங்களுள் ஒன்று என்பதை மறந்து போனோம், பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களின் நேரந்தவறாமையை, உயரிய குணங்களாகப் பார்க்கின்றன, அவர்கள் நேரம் தவறுவதை, கடுமையாக எடுத்துக்கொள்கின்றன.

நம் முன்னோர்களும் நேரத்தின் அவசியத்தை உணர்த்தி, பல வகைகளில் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள், ஆயினும் நம்மால் கடைபிடிக்கமுடியவில்லை, விளைவு? பலவித பாதிப்புகள் நோய்கள்


காலையில் எத்தனை மணிக்கு எழ வேண்டும்?
வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் குடும்பத்தலைவி அல்லது தலைவர் ஆனாலும், வீட்டு வேலைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதிகாலையில் துயில் எழுவது, சிறப்பாகும். இதனால் பலவித அற்புதங்கள் உங்கள் உடலுக்கு நிகழ்கின்றன


அதிகாலை என்பது எந்த நேரம்?
அதிகாலை என்பது 4 மணியில் தொடங்குகிறது. நம்மில் சிலரின் அதிகாலை என்பது, ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை என்று இப்போது சொல்வது ஃபேஷனாகிவிட்டது. அப்போது நள்ளிரவு பனிரெண்டு மணியை, என்ன சொல்வார்கள்? இரவு என்றா?, இப்படித்தான் மாறிப்போய்விட்டது, இன்றைய வாழ்வியல் முறைகள்.


இரவில் முழிப்பு :
எல்லோரும் இரவில் நீண்ட நேரம் கண்விழித்து இருக்கவே விரும்புகிறார்கள், காலையில் எட்டு மணிக்கு ஒரு இடத்துக்கு செல்லவேண்டும் என்றால்கூட, பனிரெண்டு அல்லது ஒரு மணி வரை இணைய உலாவலோ, டிவியில் திரைப்படமோ அல்லது ஏதோ ஒன்றைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகு அலாரம் அடித்து அடித்து ஓயும் ஏழு மணிக்கு மேல் எழுந்து, அவசரமாக குளித்தும் குளிக்காமலும், உடுத்தியும் உடுத்தாமலும், லேட்டாகிவிட்டது என்று ஓடுவார்கள். மாலை அதைப்பற்றி, என்ன வழக்கம்போல, டோஸ் விட்டாரு பாஸ் என்று பெருமையுடன் பேசிக்கொள்வரே ஒழிய, தாம் தாமதமாக எழுந்ததனால்தான், இந்தத் திட்டு, என்ற உணர்வு சிறிதும் இருக்காது, அவர்களின் பேச்சில். மீண்டும் அதேதான்ம தொடர்கதையாகும்.

எதனால் இப்படி நடக்கிறது? ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? குழந்தைகளை, நேரத்தில் எழ வைக்கும் பழக்கத்தை சிலர் மட்டுமே தீவிரமாகக் கடைபிடித்தார்கள், ஐந்து அல்லது ஆறுக்குள் எழும் குழந்தைகள், காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்து, சற்று உடற்பயிற்சி செய்துவிட்டு, படிக்க ஆரம்பித்து விடுவர். பின்னர் உணவு அருந்திவிட்டு, பள்ளி அல்லது கல்லூரிக்கு, சைக்கிளில் நேரத்துக்கு சென்றுசேர்வர்.

வாழ்வியல் முறை
நேரத்துக்கு பசி எடுக்கும், உணவை சாப்பிட்டு, மாலையில் சற்றுநேரம் விளையாடிவிட்டு மீண்டும் சிறிதுநேரம் வீட்டுப்பாடங்கள் படித்துமுடித்துவிட்டு, இரவு சாப்பாடு முடித்து, ஒன்பது அல்லது பத்து மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடுவர். என்ன ஒன்பது மணியா? அது, எங்கள் கணக்கில், மாலை நேரம், தெரியுமா, என்பார்கள் சிலர், அதனால்தான், அதிகாலை என்பது, ஏழு மணியாகத் தெரிகிறது, அவர்களுக்கெல்லாம்!


தாமதமாக எழுந்தால் என்ன நடக்கும்?
லேட்டாகப் போய், டோஸ் கிடைக்கும் என்பது ஒருபுறம், மறுபுறம் உடல் ஆரோக்கியம், புத்துணர்வு மற்றும் அன்றைய நாளின் செயல்படும் தன்மை மந்தமாகிவிடும். இதனால், உடல் சோர்வாகி, தளர்ந்துபோய், தூக்கக் கலக்கத்துடன் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பர். இந்த பாதிப்பால், மனம் வெறுத்து, நான் உண்மையிலேயே சீக்கிரம் எழத்தான் விரும்புகிறேன், என்னால் முடியவில்லையே, என்று வருந்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்?


அதிகாலையில் எழ என்ன செய்யவேண்டும்?
அதிகாலையில் எழுவது என்ற சிந்தனையில் உறுதியாக இருப்பதை, மனதில் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும், நாளை காலையில் ஆறு மணிக்கு எழவேண்டும், நாளை காலை ஆறு மணி, மெளனராகத்தில் கார்த்திக் சொல்வாரே, சிக்ஸ் ஓ கிளாக், ஆறு மணி, சிக்ஸ் ஓ கிளாக் என்று, அது போல.


நேரத்தில் எழுவதால் உண்டாகும் நன்மைகள் :
நேரத்தில் எழுவதால், மனம் புத்துணர்வு அடையும், மனம் இலகுவாகி, ஆசிரியர் நடத்தும் பாடங்கள் மனதில் பதியும் என்பதைவிட எளிதில் புரியும். பரபரப்பு இல்லாத வாழ்க்கையால், இரத்த ஓட்டம் சீராகி, உடலும் மனமும் வலுவாக இருக்கும், சிறிய விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படாமல், இயல்பாக அவற்றை அணுக முடியும்

மூளை திறன் அதிகரிக்கும் :
இதன்மூலம், காலையில் எழவேண்டிய செயல், உடலின் கட்டளை மையமான மூளையில் பதிந்து, சரியான நேரத்திற்கு முன்பே, நம்மை விழிப்படைய வைத்துவிடும். ஆயினும் உடனே எழுந்திராமல், கண்விழித்து சற்றுநேரம், அமைதியாக இருந்தபின்னரே, எழ வேண்டும். இதனால் உறக்கத்தில் நடைபெற்ற இரத்த ஓட்டத்தின் வேகம் சீராக மாறும். அவசரமாக எழும்போது, இரத்த ஓட்டம் வேகமாகி, படபடப்பை உண்டாக்கும். மேலும் உறங்கும் இடம் காற்றோட்ட வசதியுடன், சூரிய வெளிச்சம் அறையில் ஊடுருவும்படி அமைந்திருந்தால், வெளிச்சத்தில் உங்களை அறியாமலும், எழுந்து விட முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, அதிகாலையில் எழ வேண்டும் என்றால், இரவு வழக்கத்தை விட, சீக்கிரமாக உறங்கவேண்டும்.


ஏன் அதிகாலையில் எழ வேண்டும்?
முன்னோர்கள் குறிப்பிடும் அதிகாலை நேரம் என்பது காலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை உள்ள காலத்தைக் குறிப்பதாகும், இந்த காலத்துக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். வானியல் அறிவியல், இந்த நேரத்தில்தான், காற்றில், ஓசோன் அதிகம் இருப்பதாகக் கூறுகிறது.


என்ன நடக்கும் இந்த அதிகாலையில்?
நாம் உயிர்வாழத்தேவையான காற்றே, நமது பிராணனைக் காக்கும் பிராண வாயுவைத் தருகிறது என்பதை நாமறிவோம். அந்த பிராண வாயு, சாதாரண நேரத்தில் உள்ள காற்றில், இரண்டு அணுக்கள் என்ற அளவில் இருக்குமாம், இதுவே, பிரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை வேளையில் ஓசோன் வாயுவும் இந்தக் காற்றில் கலக்கும்போது, ஓசோன் வாயுவில் உள்ள பிராண வாயுவின் அளவான மூன்றும் சேர்ந்து, ஐந்து என்ற பிராணவாயுவின் உயரிய அளவில், பஞ்சபூதங்களும் இணைந்த சக்திநிலையில் உள்ள இந்தக் காற்றினை சுவாசிக்கும்போது, மனித உடலில் உள்ள நெடுநாள் வியாதிகளும் தீரும்


உயிர் வலுக்கும் :
உடல் பிராணன் நிரம்பி, வலுவாகும், மேலும் அமிர்த காற்று எனப்படும் ஓசோன் கலந்த காற்றை சுவாசிப்பதனால், உடலும் மனமும் நலமாகி, தேவர்கள் எனும் உயர்ந்தநிலையை அடைவர் என்று பண்டை நூல்கள் கூறுகின்றன. அதிகாலையில், பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் காரியங்கள், வெற்றியைத்தரும் என்பது, பழந்தமிழர் நம்பிக்கை.

அதிகாலை விழிப்பின் நன்மைகள் :
உடலுக்கும் மனதுக்கும் சக்தி அளிக்கும். அதிகாலையில் நடப்பதும், ஓடுவதும், உடலின் ஆற்றலை சீராக்கி, புத்துணர்வூட்டும் செயல்களாகும். படிப்பது எளிதில் புரியும். நாள் முழுதும் புத்துணர்வாக இருக்கலாம்.


நேர் மறை எண்ணங்கள் :
நேர்மறை எண்ணங்களுடன், செயல்களில் நேர்மை கொண்டு செயல்படும்போது, அந்த செயல், மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த அளவு பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொண்டாலே, அவை உடலுக்கு அதிக அளவில் செயல்படும் ஆற்றலை வழங்குவதை, நாம் உணர முடியும்.


சொல் பலிக்கும் :
எல்லாவற்றையும் விட, அதிகாலையில் எழுபவர்கள் சொல்லும், சொல் பலிக்குமாம், அதனால், அவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பது, முன்னோர் வாக்கு. உறக்கத்தை வென்றால், இலட்சியத்தை அடையலாம்! அதிகாலையில் எழுபவனே, இலட்சியத்தை அடைகிறான்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!