வாட்ஸ்ஆப் இல் அழிக்கப்பட்ட தகவலை மீண்டும் எளிதில் எடுக்க முடியும்… எப்படி எனத் தெரியுமா?


வாட்ஸ்ஆப் இல் அழிக்கப்பட்ட தகவலை மீண்டும் பெறுவது எப்படி என்று, ஸ்பெயினின் “ஆன்ட்ராய்ட் ஜெப்” எனப்படும் வலைப்பதிவு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் பயனாளர்களின் வசதி தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து தனது சேவையை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.


கடந்த வருடம் “டெலிட் ஃபார் எவ்ரி ஒன்” என்கிற அப்டேட்டினை வழங்கியது, இதன் மூலம் தவறுதலாக அனுப்பிய தகவலை 7 நிமிடங்களில், தகவலை அனுப்பியவரே டெலிட் செய்ய கூடிய வசதியை அறிமுகம் செய்தது,

இந்த சேவையானது உலகம் முழுதும் அனைவராலும் வரவேற்கப்பட்டது, இந்நிலையில் “டெலிட் ஃபார் எவ்ரி ஒன்” மூலம் தகவல் அழிக்கப்பட்டாலும், அந்த தகவலை மீண்டும் பெற முடியும் என்று ஸ்பெயின் டெக்னாலஜி “ஆன்ட்ராய்ட் ஜெப்” எனப்படும் வலைப்பதிவானது அதன் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.


“நோடிஃபிகேஷன் ஹிஸ்ட்ரி” எனப்படும் ஆப்-ஐ பயன்படுத்தி ஆன்ட்ராய்ட் நோடிஃபிகேஷன் பதிவுகள் மூலம் அழிக்கப்பட்ட தகவலை மீண்டும் எளிதில் எடுக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அழிக்கப்பட்ட தகவலானது 100 எழுத்துகளுக்குள் இருந்தால் மட்டுமே மீண்டும் பெற இயலும் எனறு அந்த வலைப்பதிவு தெரிவித்துள்ளது. – Source : newstig.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!