வரதட்சணைக்காக பெண்ணொருவர் செய்த விசித்திர செயல்… அதிர்ச்சியடைந்த இரு மனைவிகள்…!


உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் என்ற ஊரில் வசிப்பவர் ஸ்வீட்டி சென். இவர் சமூக வலைதளமான முகநூலில் கிருஷ்ணா சென் என்ற பெயரில் பெண்களை கவர்ந்து வந்துள்ளார்.

மேலும் ஆண் வேடமணிந்து நான்கு ஆண்டுகளாக நடித்த இவர், வெவ்வேறு காலக்கட்டங்களில் இரண்டு பெண்களையும் வரதட்சனைக்காக மணந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, “சிறுவயது முதலே ஆண் போல வேடமிட்டு நடமாடுவது, தலைமுடியை வெட்டிக் கொள்வது அந்தப் பெண்ணுக்கு வழக்கமானதுதான்.


இவர் தான் சிஎப்எல் பல்ப் நிறுவனரின் மகன் என்று கூறி முதல் மனைவியை மணந்திருக்கிறார். மேலும் இவர் முதல் மனைவியின் வீட்டில் தொழிற்சாலை தொடங்குவதாக கூறி ரூ.8,50,000 வரதட்சனையாக பெற்றிருக்கிறார்.

இவர் இரண்டாவது மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்திருக்கிறார். மேலும் இரண்டாவது பெண்ணிற்கு உடல் ரீதியாக உறவு கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் இவர் மீது சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது.

அதனால் இரண்டாவது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவர் பெண் என்பதால் அந்த திருமணம் செல்லாத திருமணமாகி விடுகிறது.

இதனால் ஸ்வீட்டி சென் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கைப் பதிவு செய்ய இயலாது” என்றனர். இந்நிலையில் ஆண் வேடமிட்டு ஏமாற்றியதுக்காக ஸ்வீட்டி சென் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். – Source : tamil.eenaduindia.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!