சைக்கிளில் செல்ல பெற்றோருக்கு உதவிய சிறுவன்- ஐ.ஏ.எஸ். அதிகாரி பகிர்ந்த வீடியோ!

சிறுவர்களின் சேட்டைகள் மட்டுமல்ல, அவர்களின் நல்ல செயல்கள் குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று விடும்.

அந்த வகையில் அவனிஷ் ஷரன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், மேம்பாலத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதையும், அப்போது ஒரு குடும்பத்தினர் சைக்கிளில் செல்வது போன்றும் காட்சிகள் உள்ளது.

அதில் மேம்பாலத்தில் சைக்கிளில் செல்வதற்கு பெற்றோருக்கு சிறுவன் உதவுகிறான். அதாவது பெற்றோரை சைக்கிளில் வைத்துக் கொண்டு மேம்பாலத்தின் மேல செல்ல சிறுவன் அவர்களை தள்ளுவது போலவும், அதை தனது பொறுப்பாக கருதி அந்த சிறுவன் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன.

வாழ்நாள் முழுவதும் இதுபோன்று பெற்றோருக்கு ஆதரவாக இருங்கள் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

ஆனால் சிலர் குழந்தையை இதுபோன்று கஷ்டப்படுத்தலாமா? என்று விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!