ரெட்மி நோட் 5 வாங்குவோருக்கு ஜியோ வழங்கும் அதிரடி சலுகை…!


சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ 100% கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நேற்று (பிப்.14) நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்மார்ட்போன் அறிமுக விழாவின் போது புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ரெட்மி 5A ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகைகளை வழங்க ஜியோ மற்றும் சியோமி முதல் முறையாக கூட்டணி அமைத்தன.

இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்பட்டது.

சமீபத்திய ஜியோ சலுகையில் ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இந்த கேஷ்பேக் வவுச்சர் வடிவில் வழங்கப்படுகிறது. இத்துடன் தற்போதைய ஜியோ திட்டங்களில் 100% வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ கேஷ்பேக் சலுகை:

– ஜியோ வழங்கும் ரூ.2,200 இன்ஸ்டண்ட் கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய 44 வவுச்சர்கள் வடிவில் மை ஜியோ செயலியில் வழங்கப்படும். இதனை பெற வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலியில் இருந்து ரூ.199 அல்லது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

– கேஷ்பேக் வவுச்சர்கள் அடுத்தடுத்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ரூ.199 அல்லது ரூ.299 ரீசார்ஜ்களின் போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ டபுள் டேட்டா சலுகை:

– ஜியோ வழங்கும் டபுள் டேட்டா சலுகை ரூ.198 அல்லது அதற்கும் அதிக தொகையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களிலும் வழங்கப்படுவாதக அறிவிக்கப்பட்டுள்ளது.

– டபுள் டேட்டா சலுகை முதல் மூன்று ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும்.

– இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 336 ஜிபி 4ஜி டேட்டா (ரூ.198 ரீசார்ஜ் செய்யும் போது 56 ஜிபி டேட்டாவுக்கு பதில் 112 ஜிபி- மூன்று முறை ரீசார்ஜ் செய்யும் போது 336 ஜிபி) பெற முடியும். அதிகபட்சம் 4500 ஜிபி 4ஜி டேட்டா (ரூ.9,999க்கு ரீசார்ஜ் செய்யும் போது இருமடங்கு டேட்டா 1500 ஜிபி என்ற வகையில் மூன்று ரீசார்ஜ்களுக்கு 4500 ஜிபி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 22-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.13,999 முதல் துவங்குகின்றன. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!