சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்…!


சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடத்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 ஸ்மார்ட்போன் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து ஆப்பிள் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சிங்கப்பூரை சேர்ந்த கனாலிஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 7 முதலிடம் பிடித்துள்ளது.


உலகம் முழுக்க 2017 மூன்றாம் காலாண்டில் 1.3 கோடி ஐபோன் 7 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இரண்டாவது இடத்திலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6S ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த மாடல் உலகம் முழுக்க 79 லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

மூன்றாவது இடத்தில் 78 லட்சம் யுனிட்களை விற்பனையான சாம்சங் கேலக்ஸி ஜெ2 பிரைம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஒப்போ நிறுவனத்தின் A57 ஸ்மார்ட்போன் 78 லட்சம் யுனிட்களும் R11 ஸ்மார்ட்போன் 72 லட்சம் யுனிட்கள் விற்பனையாகி நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளது.

இந்த பட்டியலில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. இரண்டு மாடல்களும் சர்வதேச சந்தையில் ஒட்டுமொத்தமாக 1.18 கோடி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.


ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 63 லட்சமும், ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 54 லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 8.28 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இது முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 8.2 சதவிகித வளர்ச்சியாகும். சாம்சங் நிறுவனத்தை பொருத்தவரை கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் 44 லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 4.67 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 2.6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹூவாய், ஒப்போ மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் முறையே 3.91 கோடி, 3 கோடி மற்றும் 2.8 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து டாப் 5 இடங்களில் இடம்பிடித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!