வயதாகும் போது பெண்களை அதிகம் தாக்கும் வலிப்பு நோய்

வலிப்பு சார்ந்த நோய்களில் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கே உரித்தான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வலிப்புகளை உருவாக்கும் தன்மை உடையது, என்கிறார்கள்.

ஆண்களிடம் உள்ள புரொஜெஸ்டீரான் ஹார்மோன் வலிப்புகளை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவக்காலம், குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன், ரசாயன மாற்றங்கள் வலிப்பு நோயை உருவாக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

வலிப்பு நோயுடைய ஒரு பெண், கருத்தரிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அது போலவே, கருத்தரித்த பெண்களுக்கு வலிப்பு வந்தால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன.

வலிப்பு நோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு, முகப்பரு, எடை கூடுவது, முடி உதிர்வது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவற்றை எல்லாம் மனதில் கொண்டே பெண்களுக்கு வலிப்பு நோய் சிகிச்சையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வலிப்பு நோய் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்த தடையும் இல்லை. தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பெறுவது போன்றவை இயல்பாக எல்லோரையும் போல இருக்கும் என்பதால் அச்சம் தேவை இல்லை.

தாய்க்கு வலிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறுகிறார்கள். மகப்பேறு காலத்தில் வலிப்புகளை கட்டுப்படுத்துவதே முதன்மையாக கருதப்படும். 50, 60 வயதுக்கு பிறகு வலிப்பு வரும் வாய்ப்பு இரட்டிப்பாகிறது எனவும் டாக்்டர்கள் எச்சரிக்கிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!