181 திரைவிமர்சனம்!

நாயகன் ஜெமினி புதிய திரைப்படம் ஒன்றை இயக்க ஆசைப்படுகிறார். அதற்காக ஸ்கிரிப்ட் எழுத தயாரிப்பாளர் கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால் ஜெமினிக்கு ஸ்கிரிப்ட் எழுத தடைகள் வருகிறது. இதனால் தன் மனைவிக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுசில் தங்கி ஸ்கிரிப்ட் தொடங்க செல்கிறார் ஜெமினி. அங்கு அமானுஷ்ய சக்தி ஒன்று ஜெமினி மற்றும் அவரது மனைவி ரீனாவுக்கு தொந்தரவு கொடுக்கிறது.

மேலும் ஜெமினியை ஸ்கிரிப்ட் எழுத விடாமல் செய்கிறது. இறுதியில் ஜெமினி ஸ்கிரிப்ட் எழுதி முடித்தாரா? ஜெமினியை தொந்தரவு செய்யும் அமானுஷ்ய சக்தி எது? எதற்காக சொந்தரவு செய்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெமினி, சாதுவாக நடித்து இருக்கிறார். அமானுஷ்ய சக்தி பயமுறுத்தும் போதும் கூட பெரிய ரியாக்ஷன் காட்டாமல் இருக்கிறார். மனைவியாக நடித்து இருக்கும் ரீனா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அமானுஷ்ய சக்தியாக வரும் காவ்யா, ஒரு சில இடங்களில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு உண்டான வீடு, நண்பர்கள், பலி வாங்குதல் ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதை எழுதி இருக்கிறார் இயக்குனர் இசாக்.

திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். அதுபோல், பிளாஷ்பேக் வரும் காட்சி மனதில் பதியவில்லை. ஏற்கனவே வந்த பழைய கதையை தூசி தட்டி எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

ஷமீல்.ஜே இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பிரசாத்தின் ஒளிப்பதிவு பெரியதாக எடுபடவில்லை. மொத்தத்தில் 181 – திகில் குறைவு.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!