ஹூவாய் இன் புதிய ஸ்மார்ட்போனில் இதுவரை கண்டிராத அசத்தும் அம்சம்… என்ன தெரியுமா?


ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஹூவாய் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவற்றில் ஹூவாய் P சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் லைட், ரெகுலர் மற்றும் பிளஸ் ரக ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்

என கூறப்படுகிறது. இதன் லைட் வேரியண்ட் ஸ்மார்ட்போனில் டூயல் கேமராவும் மற்ற இரண்டு பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் நகரில் ஹூவாய் நடத்த இருக்கும் விழாவிற்கான அழைப்பிதழ்களில் ஈஃபிள் கோபுரங்களின் பன்புறம் O குறியீடு இடம்பெற்றிருக்கிறது.


இவை மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுவதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு அம்சம் குறித்த வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

இவை ஹானர் வியூ 10 போன்று புதிய ஸ்மார்ட்போனிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கம்ப்யூட்டர்ஹாய் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஹூவாய் P11 லைட் அல்லது P20 லைட் ஸ்மார்ட்போன் சீரீஸ்-இல் ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட்டப், மற்ற மாடல்களில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ஐபோன் X கேமராக்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனின் மூன்று பிரைமரி கேமராக்களும் செங்குத்தாக வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமராவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு ஓரியோ சார்ந்த EMUI 8.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!