இந்தியாவை தோற்கடித்தால்… ஜிம்பாப்வே பையனை கட்டிக்குவேன் – சவால் விடும் பாகிஸ்தான் நடிகை!

இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை சவால் விடுத்து உள்ளார்.

நவம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை, 20 வர் உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது.இந்தப் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இப்போது, பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி வரவிருக்கும் போட்டி குறித்து டுவீட் செய்துள்ளார், மேலும் ஜிம்பாப்வே இந்தியாவை தோற்கடித்தால், ‘ஜிம்பாப்வே பையனை’ திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் “அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என டுவிட் செய்து உள்ளார். இந்த டுவீட் பல லைக்குகளையும் ரீடுவீட்களையும் பெற்றுள்ளது.

“ஆஹா என்ன அற்புதமான ஒப்பந்தம்” என்று ஒரு நெட்டிசன் பதிலளித்தார், மற்றொருவர் “ஆனால் அவர்கள் மறுத்தால்?” என கேட்டு உள்ளார். பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி கிரிக்கெட் மற்றும் நடந்து வரும் உலகக் கோப்பையின் தீவிர ரசிகராகத் தெரிகிறது.

மேலும், கிரிக்கெட் மட்டுமல்ல, அவரது சில டுவீட்கள் இந்த மாத இறுதியில் தொடங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பையை கால்பந்து போட்டி குறித்தும் இடம்பெற்று உள்ளன.அதில் “சவுதி அரேபியாவை அடுத்த உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனாக நான் பார்க்கிறேன் என கூறி உள்ளார்.

முன்னதாக அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோல்வியடையும்” என்று தனது போட்டிக் கணிப்பைச் வெளியிட்டு இருந்தார்.

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் செஹர் ஷின்வாரி. அவரை இன்ஸ்டாகிராமில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள் .

இதற்கு முன் பாகிஸ்தானின் நடிகை ஷின்வாரி தனது இதயத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமுக்காக ‘எதிர்காலத்தில் என் குழந்தைக்கு நீங்கள் தந்தையாக விரும்புகிறீர்களா ஜிம்மி’ என்று டுவிட் செய்து இருந்தார். மேலும் ஷின்வாரி மற்றொரு ட்வீட்டில், ‘ஜிம்மி ஐ லவ் யூ’ என்று கூறி இருந்தார்.

செஹர் ஷின்வாரி பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் பிறந்தார். கோஹாட் பகுதியைச் சேர்ந்த ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு ‘ஷேர் சாவா ஷேர்’ என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!