2வது மனைவியுடன் லிப்லாக்.. சுச்சியின் முன்னாள் கணவரின் ரொமான்ஸ்!

பிரபல பாடகியான சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக் தனது இரண்டாவது மனைவிக்கு லிப் லாக் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ஆர்ஜே, பாடகி, நடிகை, எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டார் சுச்சி. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனநலம் பாதிப்பு

சுச்சியின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அவர்கள்தான் அந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. சுச்சிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சினிமாவில் தான் கொண்ட நட்பு வட்டத்தில் இருந்தே ஓரங்கட்டப்பட்டார் சுச்சி.

சுச்சி விவாகரத்து

சுச்சி புகழின் உச்சத்தில் இருந்தபோதே நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்ட்டிஸ்ட்டுமான கார்த்திக்கை திருமணம் செய்தார். ஆனால் சுச்சி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியது அவர்களின் திருமண வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்தனர்.

முன்னாள் கணவர்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் சுச்சி. இதில் அவரது நிலையை பார்த்த ரசிகர்கள், சுச்சியா இப்படி ஆகிவிட்டார் என பரிதாபப்பட்டனர். இதனை தொடர்ந்து சுச்சியின் முன்னாள் காதலரான கார்த்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மேடை நாடக குழுவில் உள்ள அம்ரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

லிப்லாக்

தற்போது தனது காதல் மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார் கர்த்திக். அந்த போட்டோவை அம்ருதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது கணவருடன் எடுத்துள்ள இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார் அம்ருதா. இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!