பூஜை பட நடிகையை காதலிக்கும் நடிகர் விஷால்…!

நடிகர் விஷால் பூஜை பட நடிகையை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக கெரியரை தொடங்கிய விஷால் செல்லம்மே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார் விஷால்.

வரலட்சுமியுடன்…

தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார் விஷால். இந்நிலையில் நடிகர் விஷால் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலிப்பதாக தகவல் பரவியது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.ஆனால் அதுகுறித்து இருவரும் எதுவும் பேசவில்லை.

லக்ஷ்மி மேனனுடன்…

பின்னர் நடிகை லக்ஷ்மி மேனனை நடிகர் விஷால் காதலிப்பதாக தகவல் பரவியது. இதனிடையே நடிகர் விஷாலுக்கு ஹைத்ராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெறாமல் நின்று போனது.

பூஜை பட நடிகை

இதனை தொடர்ந்து நடிகர் விஷால், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிகர் சங்க பணிகள் என இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் பூஜை படத்தில் நடித்த நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடோடிகள்…

அதாவது பூஜை படத்தில் விஷாலுடன் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்தது. அவர்களில் அபிநயாவும் ஒருவர். வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளியான அபிநயா, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

விரைவில் திருமணம்

தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் அபிநயா. கடைசியாக சீதா ராமம் படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகர் விஷால் அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீயாய் பரவும் இந்த தகவல் குறித்து இருவரும்தான் உறுப்படுத்த வேண்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!