பானசோனிக் நிறுவனத்தின் P100 ஸ்மார்ட்போன் அதிரடி விலையில் அறிமுகம்…!


இந்தியாவில் பானசோனிக் நிறுவனத்தின் P100 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பானசோனிக் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5.0 இன்ச் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ், குவாட்கோட் மீடியாடெக் சிப்செட் 1 ஜிபி, 2 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

பானசோனிக் P100 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பின்புற கைரேகை சென்சார் மற்றும் 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.


பானசோனிக் P100 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 64-பிட் பிராசஸர்
– மாலி-T720 GPU
– 1 ஜிபி /2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நீலம், தங்கம் மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் பானசோனிக் P100 ஸ்மாப்ட்போனின் 1 ஜிபி ரேம் கொண்ட மாடல் விலை ரூ.5,299 என்றும் 2 ஜிபி ரேம் மாடல் ரூ.5,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களின் விற்பனை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!