இதோ உங்கள் விரல் நுனிகளில் உங்களுக்கான உலகம்…!


GM Modular நிறுவனத்தின் பெருமைமிகு தயாரிப்பான i-Fi ஸ்விட்சுகளை இப்போது அறிமுகப்படுத்துகிறோம். உலகம் முழுவதும் மின்சார சேமிப்பு தொழில்நுட்பத்தை வரவேற்கும் நிலையில், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எங்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பை இதன் மூலம் வழங்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியமான மின் சேமிப்பை உயர்தரத்துடன் அளிக்கும் இந்த தயாரிப்பு, வீடுகளில் உள்ள Wi-Fi வசதி அல்லது மொபைல் இன்டர்நெட் மூலம் இயங்கக்கூடியதாகும்.

இன்றைய நவீன இன்டர்நெட் யுகத்துக்கு GM நிறுவன தயாரிப்பான i-Fi ஸ்விட்சுகள் பொருத்தமாக இருப்பதோடு, வீட்டிலுள்ள மின்சார விளக்குகள், மின்விசிறிகள், ஜன்னல் திரைகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் அவற்றின் மூலம் இயக்க முடியும்.

குறிப்பாக, Wi-Fi அல்லது 3G மற்றும் 4G ஆகிய நெட்வொர்க்குகளில் செயல்படும் ‘G-Home Intelligent Gateway’ மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் உங்கள் வீட்டிலுள்ள அனைத்து மின் சாதனங்களையும் இயக்கலாம்.

மேலும், அகச்சிவப்பு கதிர் மூலம் இயங்கும் மின் சாதனங்களான தொலைக்காட்சி பெட்டி, செட்-டாப் பாக்ஸ், ஆம்ப்ளிபையர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் கணினி மூலமாக இயக்க இயலும்.


i-Fi – touch ஸ்விட்சுகளின் சிறப்பம்சங்கள்:
• வீட்டிலுள்ள Wi-Fi இணைப்பு மற்றும் மொபைல் இன்டர்நெட் மூலமே இயக்கலாம்..

• எந்த ஒரு இடத்திலிருந்தும் உங்கள் வீட்டிலுள்ள மின்சார விளக்குகள், மின்விசிறிகள், ஜன்னல் திரைகள், ஏர்-கண்டிஷனர் ஆகியவற்றை உங்கள் ஸ்மார்ட் போனிலுள்ள G-Home App மூலம் இயங்க வைக்கலாம்.

• ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு நேரங்களில் மின் விளக்குகள் எரியும்படி டைம் செட்டிங் செய்யலாம்.

• இந்த ஸ்விட்சுகளுக்காக தனிப்பட்ட ஒயரிங் வேண்டியதில்லை. தற்போது உபயோகத்தில் உள்ள ஸ்விட்சுகளையே பயன்படுத்தலாம்.

• இவ்வகை ஸ்விட்சுகளில் ஒளிரும் மெல்லிய ஒளி காரணமாக இருட்டிலும் ஸ்விட்ச் இருப்பதை காண முடியும். – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!