சாம்சங் நிறுவனத்தின் புதிய அதிரடி திட்டம்…!


சாம்சங் நிறுவன பட்ஜெட் விலை சாதனங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், சாம்சங் அதிரடி திட்டம் வகுத்திருக்கிறது. இதற்கென புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் ஃபிளாக்ஷிப் (விலை உயர்ந்த) ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த கேமரா தொழில்நுட்பத்தை பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.


இதனை சாத்தியப்படுத்த சாம்சங் நிறுவனம் ISOCELL டூயல் கேமரா தொழில்நுட்பத்தை படிப்படியாக வழங்க முடிவு செய்துள்ளது. மேம்படுத்தப்பட்டசெமி கண்டெக்டர் தொழில்நுட்பத்தில் சாம்சங் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

சாம்சங் ISOCLELL டூயல் இமேஜ் சென்சார் மற்றும் மென்பொருளினை இரண்டு அம்சங்களை வழங்க ஏதுவாக அறிமுகம் செய்துள்ளது. அதன் படி சாம்சங்கின் ISOCELL தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் ரீஃபோகசிங் (Bokeh) மற்றும் லோ-லைட் ஷூட்டிங் (LLS) உள்ளிட்டவற்றை பெற முடியும்.


முன்னதாக டூயல் கேமரா அம்சங்களை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மட்டும் சாம்சங் வழங்கி வந்தது. சாம்சங் நிறுவனத்தின் புதிய ISOCELL தொழில்நுட்பம் மூலம் டூயல் சென்சார் மற்றும் அதற்கேற்ற மென்பொருள்களை பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் வழங்க முடியும் என சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டூயல் கேமரா வழங்கும் பணி நேரம் வெகுவாக குறையும் என சாம்சங் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் ரீஃபோகசிங் அம்சத்தை வழங்க 13 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்களையும், லோ-லைட் ஷூட்டிங் அம்சம் வழங்க 8 எம்.பி. சென்சார்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.


ஒரே மாதத்திற்குள் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சார்ந்து சாம்சங் நிறுவனத்தின் இரண்டவாது அறிவிப்பாக இது அமைந்துள்ளது. கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் எக்சைனோஸ் 5 சீரிஸ் 7872 பிராசஸரை அறிமுகம் செய்திருந்தது. இந்த சிப்செட் பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களில் வழங்க இருக்கிறது.

இந்த சிப்செட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் போன்ற செயல்திறனை பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் வழங்கும் என சாம்சங் தெரிவித்திருந்தது. சாம்சங் புதிய எக்சைனோஸ் 7872 பிராசஸர் 14 நானோமீட்டர் (nm) ஃபின்ஃபெட் (FinFEt) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.


இத்துடன் 6-கோர் சி.பி.யு. மற்றும் இரண்டு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ARM A-73 மற்றும் நான்கு 1.6 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் A-53 கோர்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

புதிய சிப்செட் மற்றும் தொழில்நுட்பங்களை பயன் படுத்தும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் புதிய தொழில்நுட்பங்கள் 2018 கேலக்ஸி ஏ, கேலக்ஸி சி அல்லது கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!