கோவிலில் தரும் காப்பு கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும் தெரியுமா..?


கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றனர்.

இன்னும் ஒருசிலர் தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார்ப்போம்.

காசி மற்றும் திருப்பதி போன்ற கோவில்களிலும், சில அம்மன் கோயில் களீலும் கருப்பு கயிறும், இன்னும் சில கோயில்களில் பிரசாதமாக சிவப்பு, மஞ்சள் கயிறையும் தருவார்கள்.


இந்த கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.

வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த கயிறுக்கு 48 நாட்களுக்கு சக்தி இருக்குமாம். அதனால் கயிறை 48 நாட்களுக்கு பின் கழற்றி ஆற்றிலோ, அல்லது நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். அப்படி இல்லையென்றால் கோயில் மரங்களில் கட்டிவிட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.-Source: manithan

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி