குறைவான நேரத்தில் சிகப்பழகை பெற துடிக்கும் பெண்கள் இதை பின்பற்றுங்க..!


பெண்கள் சராசரியாக அவர்கள் வாழ்நாளில் 335 மணி நேரம் அதாவது 2 வாரங்கள் அவர்களது அழகை பராமரிப்பதில் செலவிடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இனியும் நீங்கள் இவ்வளவு நேரம் செலவளிக்காமல் இந்த எளிய மேக்கப் டிப்ஸை தெரிந்துகொண்டு நேரத்தை மிச்சபடுத்துங்கள்…

மஸ்காரா
உங்களது இமைமுடிகளை மேலும் அடர்த்தியாக காட்டும் மஸ்காராவை பெண்கள் அதிகம் விரும்புவர். ஆனால் இது சில நேரங்களில் முடியை தாண்டி கண்ணிலும் பட்டுவிடும். இதனை தவிற்க ஒரு பேப்பர் அல்லது சிறு அட்டையை முடிகளுக்கு மேலே வைத்து போடலாம்.

செயற்கை இமைமுடிகள்
இயல்பாக இமைமுடிகள் அடர்த்தி கம்மியாகவோ, அல்லது சிறியதாகவோ இருந்தால் செயற்கையான இமைமுடிகளை பெருத்திக்கொள்வர். இதனை ஒட்டும் கம்மை அதிகமாக வைத்துவிட்டோமானால் மொத்தம் சொதப்பல் தான். எனவே ஒரு ஹார்பின்னை பயன்படுத்தி அதில் கம்மை தடவலாம்.

கிரீமீ ஐ ஷாடோ
மிகவும் அவசர அவசரமாக மேக்கப் போட வேண்டும் என்று நினைக்கும்போது, சாதாராண ஐ ஷாடோவை போட அதிக நேரம் எடுக்கும். எனவே நீங்கள் கிரீமீ ஐ ஷாடோவை பயன்படுத்தலாம். இது உங்கள் நேரத்தை மிச்சபடுத்தும்.

பிரஷ்
உருளையாக இருக்கும் பிரஹை பட்டையாக மாற்ற ஒரு சிறு ஐடியா.

ஸ்பூன் டிரிக்
சிலர் ஒரு ஐ ஷாடோவை பாதி கண் ஒரு கலராகவும் மற்றொரு பாதி வேற்றொரு கலராகவும் போட என்னும் போது சரிபாகமாக பிரிக்க ஸ்பூனை பயன்படுத்தல்லாம்.


புருவம் அடர்த்தியாக
புருவத்தை சற்று அடர்த்தியாக காமிக்க மஸ்காரவின் பிரஷையே பயன்படுத்தலாம்.

முதலில் கண்கள்
மேக்கப் செய்யும் போது முதலில் கண்களின் மேக்கபை தான் செய்ய வேண்டும்.

லிப்ஸ்டிக்
லிப்ஸ்டிக்கை உங்கள் ஐ ஷாடோவாகவும், பிளஷாகவும் கூட பயன்படுத்தலாம்.

காலை மேக்கபை இரவு மேக்கப்பாக மாற்ற
சில நேரங்களில் உங்களுக்கு மேக்கப் போட நேரம் இருக்காது. காலையில் போட்ட மேக்கப்புடன் இரவு வரை இருக்கவேண்டி இருக்கும் இந்த சமயங்களில் உங்களது கைப்பையில் இருக்கும் டார்க்லிப்ஸ்டிக்கை எடுத்து ஐ ஷாடோவாக போட்டு சிறுது பிளஷ் மட்டும் ஹலைட் செய்துகொள்ளலாம்.

Vaseline
எப்போது மஸ்காரா தான் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. சிறிதளவு vaselineஐ எடுத்து மஸ்காரா பிரஷினை பயன்படுத்தி முடிகளில் பயன்படுத்தலாம். இது இமைமுடிகளின் உதிர்வில் இருந்து தடுக்கும்.

தேங்காய் எண்ணெய்
இரவு நேரங்களில் நட் கிரீமை தவிர்த்து கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது கரும்புள்ளிகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

பவுண்டேஷன்
ஐ ஷாடோ போடுவதற்கு முன் கண்களில் பவுண்டேஷனை போட்டு போட்டால் நீண்ட நேரம் ஐ மேக்கப் இருக்கும்.-Source: manithan

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி