இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்!

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் முன்னாள அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர், சவுதி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதற்கிடையே, இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்தார். இந்நிலையில், ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சேவின் வாரிசை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் வரை இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார்.

73 வயதான விக்கிரமசிங்கே இலங்கையின் தற்காலிக அதிபராக பிரதமர் அலுவலகத்தில் இன்று, தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!