வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி திட்டம்…!


ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய போஸ்ட்பெயிட் திட்டம் வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் வோடவோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய வோடபோன் திட்டத்தின் விலை ரூ.399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், 100 எஸ்.எம்.எஸ்., மாதம் 30 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் ஒரு வருடத்திற்கான வோடபோன் பிளே சேவை மற்றும் ரூ.4000 மதிப்புள்ள திரைப்படங்களை இலவசமாக பார்க்கும் வசதிமற்றும் மேக்ஸ்டர் சந்தா 4 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.


மற்ற வோடபோன் திட்டங்களை போன்றே அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ரெட் ஷீல்டு சேவையும் வழங்கப்படுகிறது. இந்த இன்சூரன்ஸ் கொண்டு ஸ்மார்ட்போன் திருடு போனாலோ அல்லது சேதமடைந்தாலோ குறிப்பிட்ட தொகையை திரும்ப பெற முடியும்.

முன்னதாக வோடபோன் ரெட் வாடிக்கையாளர்கள் ரூ.399 திட்டத்தை செயல்படுத்த தங்களது மொபைல் போனில் இருந்து 199 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும். புதிய வோடபோன் திட்டங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

இத்துடன் புதிய திட்டம் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வோடபோன் ரெட் பேசிக் திட்டம் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ரூ.399க்கு வழங்ககப்பட்ட இந்த தி்ட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், 10 ஜிபி டேட்டா, மற்றும் டேட்டா ரோல் ஓவர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் வோடபோன் பிளே, மேக்ஸ்டர் சந்தா வழங்கப்பட்ட நிலையில், இதன் டேட்டா அளவு முன்பை விட 20 ஜிபி அதிகரிக்கப்பட்டது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!