தருமபுரியை கலக்கிய பலே கொள்ளையன் அதிரடி கைது!

தருமபுரியில் கடந்த மாதம் அடுத்தடுத்த வீடுகளில் முகமூடி அணிந்து கொள்ளை அடித்த பிரபல கொள்ளையனை நேற்று போலீசார் கைது செய்தனர். கொள்ளையன் மீது சென்னையில் மட்டும் 20 வழக்குகள் உள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தருமபுரி அடுத்துள்ள மதிகோன்பாளையம் முகமது தெருவை சேர்ந்தவர் சாதிக்.

இவரது மனைவி பர்கானா (வயது30). கடந்த மாதம் 23-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். மறுநாள் திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல் தருமபுரி குள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஷீலா (34). கடந்த 10-ந் தேதி ரமேஷுக்கு உடல்நிலை சரியில்லாததால் பெங்களூ ருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று 20-ந் தேதி வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 2.5 பவுன் நகை திருடுேபானது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து தருமபுரி ராமக்காள் ஏரி அருகே உள்ள வணிக வளாகத்தில் 7 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தருமபுரி எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். தருமபுரி-கிருஷ்ணகிரி ரோடு ராமக்காள் ஏரி அருகே இரும்பு ராடு கையில் வைத்தபடி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து தருமபுரி டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அவர் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பிலிப்ஸ் (57) என்பதும், முகமூடி அணிந்து வீடுகளில் கொள்ளை அடித்தும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பிலிப்ஸ் மீது சென்னையில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள எம்.ரானஅள்ளி மாரியம்மன் கோவிலில் கடந்த 16.4.2022 அன்று இரவு கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினையும் இந்த கொள்ளையன் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் கொள்ளையன் மீது வழக்குபதிவு செய்ய ப்பட்டுள்ளது. இதையடுத்து தருமபுரி டவுன் போலீசார் கொள்ளையன் பிலிப்ஸ்சை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!