கருப்பு நிற உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த சத்யராஜ் மகள்..!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். தன் அப்பா சத்யராஜ், சகோதரர் சிபி போன்று சினிமா படங்களில் நடிக்க வராமல் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகள், அலட்சியம், நீட் தேர்வு குறித்து கேள்வி கேட்டு இவர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக உள்ளார். ஆரோக்கிய உணவு, தந்தை மற்றும் சகோதரரின் திரைப்பட அறிவிப்பு, குடும்பத்தினர் போன்ற புகைப்படங்களை பெரும்பாலும் பதிவிடுவார். ஸ்டைலான உடைகளில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிடுவார்.

இந்நிலையில் சிவப்பு நிற தொப்பி அணிந்து, கருப்பு நிற உடையில் செம கியூட்டாக உள்ள புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘பெண் சுதந்திரம் சமூக சுதந்திரத்தின் அடையாளம்… சுதந்திரம் என்பது யாருடைய அங்கீகாரமும் இல்லாமல் இருப்பது. உடற்பயிற்சி செய்வதை நான் ரசிக்கிறேன். ஸ்லிம்மாக, அழகாக இருப்பதற்காக நான் உடற்பயிற்சி செய்வதில்லை, ஆரோக்கியமாக இருக்கவே செய்கிறேன். நீ நீயாக இரு. சமுதாயம் சரியாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த டிரெண்டான படத்திற்கு பலரும் சூப்பர் கருத்து என குறிப்பிட்டாலும், ‘செம கியூட்டா இருக்கீங்க; சினிமாவில் நடிக்கலாமே’ என கமெண்ட் கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பும் இதேபோன்று கியூட்டான புகைப்படத்தை திவ்யா பதிவிட்டிருந்தார்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!