குழந்தை தனமாக இருப்பார்… வரதட்சணை கொடுமையால் பெண்ணுக்கு நடந்த சோகம்!

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் மேலும் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஹேனா (42). இவருக்கு சிறு வயதில் இருந்தே சற்று மனநிலை பாதிப்பு உள்ளது. குழந்தை தனமாக இருப்பாராம்… இதனால் நாற்பது வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், ஹேனாவுக்கு மணமகன் தேவை என்று அவரது பெற்றோர் மேட்ரிமோனியல் மூலம் வரம் பார்த்து வந்துள்ளனர். அதன்படி, ஆலப்புழாவை சேர்ந்த அப்புக்குட்டன் (50) என்பவர் கிடைத்துள்ளார்.


அப்புக்குட்டன் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். திருமணத்துக்கு முன்பே ஹேனாவின் பிரச்சினை குறித்து அவரிடம் கூறியுள்ளார். இருப்பினும் ஹேனாவை திருமணம் செத்துக்கொள்ள அப்புக்குட்டன் சம்மதித்துள்ளார். திருமணத்தின்போது அப்புக்குட்டனுக்கு 75 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கமும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு ஹேனாவை அப்புக்குட்டன் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும், ஹேனாவை அவரது பெற்றோருடன் பேசக்கூடாது என்றும் அப்புக்குட்டன் கூறி வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த 26 ஆம் தேதி அன்று ஹேனா பாத்ரூமில் தடுக்கி விழுந்துவிட்டதாக கூறி அப்புக்குட்டன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதத்தில் ஹேனா ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. சம்பவம் அறிந்து வந்த ஹேனாவின் பெற்றோர் மகளின் சடலத்தை பார்த்து கதறி துடித்தனர். தொடர்ந்து மக்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்புக்குட்டன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையே ஹேனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.

அதில், ஹேனா கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் ஹேனாவின் தலை மற்றும் கழுத்தில் காயம் இருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் அப்புகுட்டனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் கூடுதல் வரதட்சணை கேட்டு ஹேனாவை தினமும் அடித்து வந்ததாகவும் சம்பவத்தன்றுகடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் அப்புக்குட்டன் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!