மோப்பநாய்க்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்!

2014-ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் மோப்ப நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் லூசி சில்வர் பதக்கத்தை வென்றது.


வேலூர் மாவட்ட போலீஸ் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் சுமார் 11 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்த மோப்ப நாய் லூசி நேற்று பணி நிறைவு பெற்றது.

இதனை கொண்டாடி விடைகொடுக்கும் விதமாக மோப்ப நாய் பிரிவு போலீசார் கேக் வெட்டி கொண்டாடி பணி நிறைவு விழா நடத்தினர்.

முன்னதாக மோப்பநாய் லூசியை குளிக்கச் செய்து வழக்கம்போல் பணிக்கு செல்வது போல் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதன் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி கேக் வெட்டினர்.

லூசி கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது 2022 வரை 11 ஆண்டுகாலம் திறம்பட பணியாற்றியுள்ளது. 2014-ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் மோப்ப நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் சில்வர் பதக்கத்தை வென்றது லூசி.

இதற்கு பிறகு லூசி குற்றங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டாது. ஓய்வில் உலா வரப்போகிறது என போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!