ஹெலிகாப்டரில் நாமல் ராஜபக்சே – மனைவி தப்பியோடும் காட்சி ? வைரலாகும் வீடியோ

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது மனைவுயுடன் இன்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நாமல் குடும்பம் தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!