எலான் மஸ்கின் பதிவால் பயனர்கள் அதிர்ச்சி..!

சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து டுவிட்டரை அவர் சீரழைத்துவிடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போதைய டுவிட்டர் சி.இ.ஓவாக இருக்கும் பராக் அகர்வால் இனி ட்விட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார்.

பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க் பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது.

தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு நான் ஆண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்க பார்க்கிறேன்.

பொதுவாக நரகத்திற்கான பாதையே நல்ல நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது என்ற வாக்கியம் உண்டு. என்ன பொறுத்தவரை கெட்ட நோக்கங்களுடன் தான் நரகத்திற்கான சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் அதிலும் நல்ல எண்ணங்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. என்னுடைய நல்ல எண்ணம் நரகத்திற்கு உங்களை அழைத்து செல்லாது.

டுவிட்டரில் உள்ள ட்ரோல்களும், போட்களும் பயனர்களின் அனுபவத்தை குறைக்கின்றன. அவற்றை எடுத்து நான் போராடுவேன்.

பலதரப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கிய அமைப்பை தான் டுவிட்டரில் நான் நிறுவ உள்ளேன். அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக டுவிட்டர் இருக்கும்.

சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!