அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருப்பது எப்படி?

அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். அப்போது விஷ்ணு அஷ்டோத்திரம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வது மிக, மிக நல்லது.

அன்று பகலில் திரவ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து விரதம் மேற்கொள்ள வேண்டும். விரத சமயத்தில் விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டோ அல்லது கேட்டுக் கொண்டோ இருப்பது நல்ல பலன்களைத் தரும். அலுவலகம் அல்லது வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால், “ஓம் நமோ நாராயணாய” என்றோ, “ஸ்ரீமகாவிஷ்ணுவே நமக” என்றோ மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அட்சய திருதியை தினத்தன்று காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு போய் மனதை பெருமாளிடம் ஒப்படைத்து மனம் உருகி வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும். காலையில் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் மாலை சென்று பெருமாளை வணங்கி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து வழக்கமான உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!