வினோத நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி!

வினோத நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு உயர்சிகிச்சைக்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது

மானாமதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜெயபாரதிதேவி, இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் இவரை பிரிந்து சென்று விட்டதால் விட்டு வேலை செய்துவந்தார். இவரது 2-வது மகள் லாவண்யா (வயது18) சிவகங்கை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு மூளைக்கு செல்லும் நரம்பு சுருங்கியதால் அடிக்கடி வலிப்பு வந்து மயங்கி விடுவார். பின் மீண்டும் மறுநாள் தெளிவான நிலைக்கு வந்து விடுவார்.

இந்த பாதிப்புக்கு குறித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் அவர் குணமடையாததால் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்த இடத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.


அங்கு சிகிச்சைபெற்றும் குணமாகாததால் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நடவடிக்கையின் பேரில் மாணவி உயர்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!