செவ்வாய் கிழமையில் வரும் பங்குனி தேய்பிறை பிரதோஷ விரதம்…!

பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதோஷம் சிறப்பான ஒரு தினமாகும். அதிலும் செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்கிழமையில் வருவது சிறப்பானதாகும்.

இந்த பங்குனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி, பீட்ரூட் சாதம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு பீட்ரூட் சாதம், கேசரி போன்றவற்றை அன்னதானம் வழங்கலாம். இம்முறையில் இன்றைய பங்குனி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷ பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். நேரடி, மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் நீங்கி உடல் பலம் கிட்டும். மனோதைரியம் உண்டாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!