சாம்சங் வெளியிட்டுள்ள விண்ட் ஃப்ரீ ஏசிக்கள்- சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த ஏசியை வாங்குபவர்களுக்கு 12.5 சதவீதம், ரூ.7,500 வரை கேஷ்பேக்குகள் வழங்கப்படும்.

சாம்சங் நிறுவனம் புதிய விண்ட் ஃப்ரீ ஏசிக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏசி நேரடியான அடந்த காற்றை 0.15 m/s வேகத்தில் 23,000 சிறுதுளைகள் வழியாக அகற்றும் தன்மை கொண்டுள்ளது.

இந்த ஏசி பி.எம் 1.0 ஃபில்டர்களில் கிடைக்கும் என்றும், இதில் உள்ள ஃப்ரிஸ் வாஷ் அம்சத்தின் மூலம் ஹீட் எக்ஸேஞ்சரில் உள்ள தூசு மற்றும் பாக்டீரியாவை எளிதாக அகற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விண்ட் ஃப்ரீ ஏசிக்களை வைஃபை மூலம் சாம்சங்கின் ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் இணைந்துகொள்ளலாம். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அலெக்ஸா, கூகுள் ஹோம் மற்றும் பிக்ஸ்பியின் உதவியுடன் ஏசியை ஆன்/ஆஃப் செய்யவோ, செட்டிங்ஸை மாற்றவோ இயலும்.

அறையில் 20 நிமிடங்களுக்கு எந்த அசைவும் இல்லை என்றால், மோஷன் சென்சார் மூலம் இந்த ஏசி விண்ட் ஃப்ரீ மோடுக்குள் சென்று விடும். இதன்மூலம் ஆற்றல் சேமிக்கப்படும். அதேபோல பயனர்கள் நடப்பதற்கு ஏற்ப ஏசி காற்று அவர்கள் மீது வீசுவது போலவும் இதில் மாற்றம் செய்யமுடியும்.

தற்போது 28 மாடல்களில் வெளியாகியுள்ள இந்த விண்ட் ஃப்ரீ ஏசிக்கள் ரூ.50,9900 விலை மதிப்பில் தொடங்கி ரூ.99,990 வரை இருக்கிறது. மேலும் இந்த ஏசியை வாங்குபவர்களுக்கு 12.5 சதவீதம், ரூ.7,500 வரை கேஷ்பேக்கும் வழங்கப்படும்.

இ.எம்.ஐ வசதி, பிசிபி கண்ட்ரோலர், ஃபேன் மோட்டார், காப்பர் கண்டன்ஸர், எவப்போரேட்டர் காயில் உள்ளிட்டவைக்கு 5 வருட வாரண்டியும் வழங்கப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!