மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

சிறுகனூர் அருகே பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள குமுளூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 45). இவரது மனைவி மீனா (40). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஏழ்மையில் இருந்த பாலசுப்பிரமணி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012-ம் ஆண்டு மலேசியா சென்று அங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை தனது மனைவி மீனாவிற்கு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கனகாம்பாள் (35) என்பவருக்கும் மீனாவிற்கும் நட்பு ஏற்பட்டது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி கனகாம்பாள் சகோதரர் சுரேஷ் (வயது 32) (இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்) மீனாவுடன் நட்பாக பேசி வந்துள்ளார். பின்னர், நாளடைவில் நட்பு கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இந்நிலையில், சுரேஷ் வெளிநாடு செல்ல வேண்டும் என்று மீனாவிடம் கூறி அதற்காக ரூ.2 லட்சம் வரை பெற்று மலேசியா சென்று அங்கு எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சுரேஷ் -மீனா கள்ளத்தொடர்பு சுரேஷின் பெற்றோருக்கு தெரியவர கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேஷின் தாய் ராமாயி (60), சுரேஷின் மனைவி முத்துலட்சுமி (27), சகோதரி, கனகாம்பாள் (35) ஆகியோர் மீனா வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தையால் அவரை திட்டி, அவமானப்படுத்தி அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மீனா அப்போதே சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிறுகனூர் போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறிவிட்டதாக தெரிகிறது. நடந்த சம்பவங்கள் குறித்து மலேசியாவில் இருக்கும் தனது கள்ளக்காதலன் சுரேஷிடம் மீனா செல்போனில் கூறி மனவேதனை அடைந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த மாதம் 20-ந் தேதி மீனா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து குமுளூர் கிராமத்திற்கு வந்த பாலசுப்பிரமணி தனது மனைவிக்கு ஏற்பட்ட அவமானங்களை அறிந்து தனது மனைவியின் சாவுக்கு சுரேஷின் தாய், அவரது மனைவி, அவரது சகோதரி தான் காரணம் என்று எழுத்துப்பூர்வமாக கடந்த 14-ந் தேதி லால்குடி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சிறுகனூர் போலீசார் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷின் தாய், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!