தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் தீரும் பிரச்சனைகள்!

தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார்.


தைப்பூசம் விரதம் இருப்பது மிகவும் எளிமையானதாகும். இதனை செய்து வர தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார். தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் நன்மைகள் ஏராளம்.

பல வித காவடிகளும் அதன் பலன்களும்!

காவடிகளில் பல வித காவடிகள் இருக்கின்றது. சிலர் தங்கள் சக்திக்கேற்ப காவடி எடுப்பதும் உண்டு. கந்தன் எப்பொழுதும் எதையும் எதிர்பாராதவர். காவடி எடுக்க இயலாவிட்டாலும் தைப்பூசம் நன்னாளில் மனதார வணங்கினால் போதும்.

பால் காவடி

தைப்பூசம் நன்னாளில் பால் காவடி எடுத்து அதனை முருகனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தால் செல்வம் நிலைக்கும். ஒரு சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேர்க்க இயலாமல் இருக்கும். இவர்கள் எந்திரம், மந்திரம் என்று தேடி கொண்டு இருக்காமல் இறைவனை வணங்கினாலே போதுமானது.

சந்தன காவடி:

சந்தன காவடி எடுப்பதால் தீராத சண்டை, சச்சரவு என்று இருப்பவர்களின் வீட்டில் ஒரு முடிவு பிறக்கும்.

மயில் காவடி:

மயில் காவடி எடுத்தால் சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

பன்னீர் காவடி

பன்னீர் காவடி எடுத்தால் கடன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!