கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!

நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி. இவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் 14 சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி வெளியிட்ட செல்பி வீடியோவில், ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றார்.

சாலைகளை நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்பான் அன்சாருக்கு கண்டனம் எழுந்துள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!