ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமை – 11 வயது சிறுவன் அதிர்ச்சி முடிவு!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசம் போபாலில் 11 வயது சிறுவன் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநிலத்தின் உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.
போபாலைச் சேர்ந்த 5 வகுப்பு படிக்கும் மாணவன் சூரியன்ஷ் என்ற 11 வயது சிறுவன் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளான். இந்த ஆன்லைன் விளையாட்டில் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரூ. 6 ஆயிரம் செலவழித்துள்ளான். இது தெரிய வந்ததும் சிறுவனின் பெற்றோர் அந்த விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் புதன் கிழமை அன்று சிறுவன் சூரியன்ஷ் தன்னுடைய உறவினர் சிறுவன் ஆயுஷூடன் வீட்டின் மேல் அறையில் டிவி பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆயுஷ், சூரியன்சை தனியாக விட்டுவிட்டு கீழே வந்துள்ளார். மீண்டும் மேலே சென்று பார்க்கும் போது சூரியன்ஷ் கயிற்றில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சூரியன்சை கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சூரியன்ஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!