பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலக திட்டம்?

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய தம்பியும், நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இலங்கையில் அதிபராக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்சேவும் பதவி வகித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய தம்பியும், நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இதற்கு இலங்கை பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகிந்த ராஜபக்சே பதவி விலக உள்ளதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியான தகவல்களில் சிறிதளவும் உண்மை இல்லை. மக்களை திசைதிருப்பும் நோக்கத்தில் அவை வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை கல்வி சீர்திருத்தங்களுக்கான இணை மந்திரி சுசில் பிரேமஜெயந்தாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்துள்ளார்.

ஆளும்கட்சியை சேர்ந்த சுசில் பிரேமஜெயந்தா சமீபகாலமாக அரசை விமர்சித்து வந்தார். நாட்டின் நிதி தட்டுப்பாடு, சீன உர விவகாரம், விலைவாசி உயர்வு ஆகியவை தொடர்பாக தாக்குதல் தொடுத்தார். இணை மந்திரியான தனக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் ஓரம் கட்டப்படுவதாகவும் கூறி வந்தார். இந்த பின்னணியில் நீக்கப்பட்டுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!