சிக்கந்தருடன், ரவுடி பேபி சூர்யா கைது – கோவை சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

ரவுடி பேபி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என சென்னை, மதுரை, கோவை உள்பட பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது.

சூரியா, சிக்காவுடன் ஆபாசமாக வீடியோ எடுத்து போடுவார். இவர்களின் லைவ் வீடியோ இன்னும் மோசமாக இருக்கும். மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசுவார்கள். அவ்வப்போது இவர்களுக்குள் சண்டை வரும், பின்னர் சில நாட்களில் மீண்டும் ஒன்று சேர்ந்து வீடியோ போடுவார்கள்.

இவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை, மதுரை, கோவை உள்பட பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறைய பெண்கள் புகார் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்துள்ளனர். பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு விபசார வழக்கில் சூர்யா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!