10 ஆயிரம் பக்தர்கள் நேரடி தரிசனத்துக்கு சீரடி சாய்பாபா கோவிலில் அனுமதி!

கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளதை அடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க அகமதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சாய்பாபா கோவிலில் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி, தினசரி நேரடியாக தரிசனத்துக்கு வரும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் ராஜேந்திர போசலே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

சீரடி கோவிலில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் நேரடி தரிசனத்துக்கு 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவதால் இனி தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்ய முடியும்.

கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!