ஐபோன் 13 மாடலுக்காக ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை ஒதுக்க ஐபேட் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட திட்டத்தில் தற்போது 50 சதவீத ஐபேட் யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆசிய சந்தைகளில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது, ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளிலும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 13 உற்பத்தி சீராக நடைபெற்று வந்தது. உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் அதிக யூனிட்களை வாங்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியமானது.

வரும் மாதங்களில் ஐபேட் மாடல்களை விட ஐபோன் 13 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே ஐபோன் 13 உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!