இணையத்தில் வீடியோ ஆட்டோ ப்ளேயை தடுக்கும் புதிய கூகுள் குரோம்..!


வீடியோ ஆட்டோ ப்ளே வசதி கொண்ட வலைதளங்களை தடுக்க கூகுள் க்ரோமில் புது வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்டதாவது:

க்ரோம்-64 என்ற புதிய வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற இயங்குதளத்தில் பயன்படுத்தலாம்.


ஏற்கனவே இருந்த “mute tab” குறியீட்டை இந்த வெர்சன் மாற்றியமைத்துள்ளது. “omnibar”-ன் இடது கை ஓரத்தில் இருக்கும் “View Site Information”-ஐ க்ளிக் செய்வதன் மூலமாக வீடியோ ஆட்டோ ப்ளே வசதியை ம்யூட் செய்ய முடியும்.

இந்த வெர்சனில் கூடுதலாக HDR இமேஜிங் சப்போர்ட், HDR மானிட்டர், க்ராபிக்ஸ் கார்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

மேலும், இது விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தை “Meltdown”, “Spectre” போன்ற செயலி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!