ச்சூ மந்திரகாளி திரைவிமர்சனம்!

நடிகர் கார்த்திகேயன் வேலு
நடிகை சஞ்சனா புர்லி
இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை
இசை சதிஷ் ரகுநாதன், நவிப் முருகன்
ஓளிப்பதிவு முகமது பர்ஹாண்


படத்தின் கதை 2 கிராமங்களை சுற்றியே நடக்கின்றன. ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். எல்லோரும் அண்ணன்-தம்பி உறவு முறை கொண்டவர்கள். இருப்பினும் பொறாமை குணம் கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களின் பக்கத்து ஊரில், ஒரு சாபக்கேடு. எந்த பெண்ணும் கர்ப்பம் தரிப்பதில்லை. சூனியம் வைத்துக்கொள்ளும் கிராமத்தை சேர்ந்தவர் கதாநாயகன். அந்த பழக்கத்தில் இருந்து ஊர் மக்களை காப்பாற்ற பக்கத்து ஊருக்கு சென்று மாந்திரீகம் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துவர முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நடித்து இருக்கிறார். மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக சஞ்சனா புர்லி அறிமுகமாகி இருக்கிறார். வசீகர முகம். நடிப்பிலும் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களிலும் அசல் கிராமத்து ஜனங்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதியை கலகலப்பாக கதை சொன்ன இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை, இரண்டாவது பாதியில், ‘கிராபிக்ஸ்’ உதவியை நாடியிருக்கிறார். படம் முழுக்க ஏராளமான புது முகங்கள் நடித்திருந்தாலும் அவர்களை திறம்பட கையாண்டுள்ளார்.

சதிஷ் ரகுநாதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் நவிப் முருகன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முகமது பர்ஹாணின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் ‘ச்சூ மந்திரகாளி’ ரசிக்க வைக்கிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!